கவின் ஆணவப் படுகொலை – எழுச்சித்தமிழர் உரை – நூல் வெளியீடு

மென்பொறியாளர் கவின்(26) நெல்லையில் 29.07.2025 அன்று சாதி வெறியால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும் ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே இயற்ற வலியுறுத்தியும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் 31.07.2025 அன்று நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எழுச்சித்தமிழர் ஆற்றிய கண்டன உரை சாதிய வன்மமும் சட்டத்தின் தேவையும் என்னும் தலைப்பில் சிறு நூலாக கரிசல் பதிப்பகத்தின் வெளியீடாக கொண்டுவரப்பட்டது. இந்நூல் 09.08.2025 அன்று சென்னை சைதாப் பேட்டையில் வி.சி.க சார்பில் நடைபெற்ற ஒன்றிய அரசே, தமிழ்நாடு அரசே ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தை உடனே இயற்றிடு எனும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித்தமிழரால் வெளியிடப்பட்டது. இந்நூலைத் தொகுத்தவர் பூவிழியன்.

Comments (0)
Add Comment